» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை..!!
செவ்வாய் 21, மார்ச் 2023 5:04:47 PM (IST)
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியாக இருந்த சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை நடத்தி வருகிறது.
ஈரோடு மாநகராட்சி ஆணையரான சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதியுடைய தேர்தல் நடத்தும் அதிகாரியாக செயல்பட்டவர் சிவக்குமார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பல்லாவரம் நகராட்சி ஆணையராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டார் என்பது குற்றச்சாட்டாகும். முறைகேடு புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்ததன் அடிப்படையில் தற்போது சோதனை நடைபெறுகிறது.இன்று காலை சிவக்குமார் வீட்டில் சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வந்தனர். ஆனால் சிவக்குமார் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்ததால் சோதனை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து 2 காவலர்களை வீட்டில் காவலுக்காக நிறுத்திவிட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் திரும்பி சென்றிருந்தனர். பின்னர் சிவக்குமார் குடும்பத்தினர் வீடு திரும்பினர். இதையடுத்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் 5 பேர் கொண்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் வருவாய்துறையை சேர்ந்த 2 அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










