» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னை - குமரி இரட்டை பாதை டிசம்பரில் நிறைவு :‍ கூடுதல் ரயில்கள் இயக்க வாய்ப்பு

செவ்வாய் 21, மார்ச் 2023 11:59:45 AM (IST)

சென்னை-சென்னை - கன்னியாகுமரி இரட்டை பாதை பணிகள், வரும் டிசம்பருக்குள் முடிவடைகின்றன. இதையடுத்து, 'கூடுதலாக ஆறு சர்வீஸ் ரயில்கள் இயக்க முடியும்' என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தமிழகத்தில் பிரதான ரயில்வே கனவு திட்டமான, சென்னை, எழும்பூர் - கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை திட்டம், 1998ல் துவங்கி, தற்போது மதுரை வரை முடிக்கப்பட்டு, ரயில் சேவையும் துவங்கப்பட்டுள்ளது.அடுத்த கட்டமாக, மதுரை - திருநெல்வேலி - நாகர்கோவில் - கன்னியாகுமரி இடையே, மின்மயமாக்கலுடன் கூடிய இரட்டைப் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை, 2022ம் ஆண்டு மார்ச்சில் முடிக்க திட்டமிடப்பட்டது.

ஆனால், கொரோனா பாதிப்பு, நிதி நெருக்கடி, நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் என, பல்வேறு காரணங்களால், இந்த திட்டப் பணிகள் தாமதமாகின. தற்போது, திருநெல்வேலி வரை, இரட்டை பாதை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னை - கன்னியாகுமரி இரட்டை பாதை திட்டம், இந்த ஆண்டுக்குள் முடிந்து விடும். இதன் மூலம், தென் மாவட்டங்களுக்கு ஆறு சர்வீஸ் ரயில்கள் அதிகரிக்க முடியும்.பெரும்பாலானவை புது ரயில் பாதைகள் என்பதால், 'சிக்னல்'களை மேம்படுத்தினால், தற்போதுள்ள விரைவு ரயில்களை, மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் இயக்க முடியும் என தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து

S. பூதலிங்கம், சென்னை.Jul 5, 2023 - 03:56:35 PM | Posted IP 172.7*****

நாகர்கோவில்- தோவாளை இடையிலுருந்து, நாகர்கோவில்- கன்னியாகுமரி பாதையில் இடலாக்குடி முன்பு வரை சுமார் 6 கி. மீ அளவிற்கு தண்டவாளம் அமைத்தால் திருவனந்தபுரம் ரயில்கள் அனைத்தும் நாகர்கோவில் ஜங்சன் ரயில் நிலையம் வந்து செல்ல முடியும். நாகர்கோவில் டவுண் ரயில் நிலையத்தை இணைக்கும் சாலைகள் போக்கு வாரத்துக்கு வசதியாக இல்லை. பயணிகள் மிகவும் சிரம ப்படுகிறார்கள். இதை ரயில்வே அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital






Thoothukudi Business Directory