» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல்!

சனி 18, மார்ச் 2023 12:14:57 PM (IST)

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். 

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றும், நாளையும் நடக்கிறது. வேட்புமனு பரிசீலனை 20-ம் தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை 21-ம் தேதி மாலை 3 மணி வரை திரும்ப பெறலாம் என்றும் அதிமுக தேர்தல் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் அறிவித்து இருந்தனர்.

அதன்படி அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என்பதால் போட்டியின்றி எடப்பாடி பழனிசாமி தேர்வாக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory