» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம்: தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை!

சனி 11, மார்ச் 2023 3:33:53 PM (IST)

திருச்சி அருகே பள்ளியில் மாணவர் உயிரிழந்த சம்பவத்தில், பணியில் கவனக் குறைவாக இருந்த பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருச்சி அருகே அரசு பள்ளியில் சக மாணவர்கள் தாக்கியதில் பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம், அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வந்த தோளூர்பட்டியைச் சேர்ந்த மவுலீஸ்வரன் என்ற மாணவர் நேற்று காலை பள்ளி வளாகத்தில் மாணவர்களிடையே எதிர்பாரத விதமாக நடந்த சம்பவத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

மகனை இழந்து வாடும் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், முதல்வரின் அறிவுறுத்தலுக்கு இணங்க இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டக் காவல்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும், இந்த, நிகழ்வின்போது பணியில் கவனக் குறைவாக இருந்த பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் பள்ளிகளில் நிகழாத வண்ணம், மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

யாருப்பாMar 12, 2023 - 06:00:13 PM | Posted IP 162.1*****

இந்த அமைச்சர் வேஸ்ட் . எல்லாம் சும்மா உருட்டுவது மட்டுமே வேலை அவ்வளவுதான்.

THALAIMAI AVRKALAEMar 11, 2023 - 09:00:34 PM | Posted IP 162.1*****

SAMBALAM VANKUM ASIRIYER PANIYIL SARIYAGA IRUNTHAL YEN SANDAI VARA POGUTHU MANAVARGAL VELEIL (OUT SIDE) SANDAI POTTAL KOLUPU... BUT SCHOOL CAMPUS IL SANDAI POTTAL YARU PORUPPU....

தலைமைMar 11, 2023 - 03:56:54 PM | Posted IP 162.1*****

ஆசிரியர் என்ன செய்வார்... இதுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்... இவனுங்க கொழுப்பு எடுத்து திரிஞ்சு... சண்டை போட்டு இருக்காங்க...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory