» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அவதூறு பரப்பும் யூடியூப் சேனல்கள்: காவல் துறை ஆணையரிடம் சரத்குமார் புகார்

புதன் 1, பிப்ரவரி 2023 11:30:17 AM (IST)

தன்னைப் பற்றி அவதூறு பரப்பும் 2 யூடியூப் சேனல்களை முடக்க வேண்டும் என ச.ம.க தலைவர் சரத்குமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகார் மனுவில், "சில தினங்களாக இரண்டு யூடியூப் சேனல்களில் என்னை பற்றியும், எனது குடும்பத்தினரைப் பற்றியும் கலைத் துறையினரைப் பற்றியும் தவறாக சித்தரித்து இழிவுபடுத்தும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

உண்மைக்கு புறம்பாக கற்பனை செய்திகளை தவறான நோக்கத்தில் தொடர்ந்து வீடியோவாக பதிவு செய்து வெளியிடப்பட்டு வருகிறது. எனது புகழுக்கு களங்கம் கற்பித்து தனிப்பட்ட முறையில் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாக்கும் இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்ட நபர் யாராக இருந்தாலும் கண்டறிந்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற யூடியூப் சேனல்களை முடக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital



Thoothukudi Business Directory