» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை : ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

புதன் 25, ஜனவரி 2023 12:23:08 PM (IST)புதுக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையினை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு, தொடங்கி வைத்தார்

திருநெல்வேலி மாவட்டம், சிங்கிகுளம் ஊராட்சி புதுக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையினை மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் முன்னிலையில் இன்று தொடங்கி வைத்து பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.
 
அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்;டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சுமார்ட் கிளாஸ் வகுப்பறை ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள எல்லா பள்ளிகளிலும் ஒரு வகுப்பறையிலாவது இந்த திட்டம் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக 75 இன்ஞ்ச் அகலமுள்ள டு.நு.னு வுஏ ஒன்று பள்ளிகளுக்கும் சுமார்ட் கிளாஸ்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவற்றை கரும்பலகையாக பயன்படுத்தலாம், கணினியாக பயன்படுததலாம், 

கூகுல் முறையில் தேடுபொருளாகவும் பயன்படுத்தலாம், மொபைல் போன் போன்று பேசுவதற்கும், யூடிப்க்காகவும் பயன்படுத்தலாம், ஆக ஒரு ஆப்பிள் மொபைல் போனில் என்ன,என்ன நவீன வசதிகள் உள்ளதோ அதை விட அதிக தொழில் நுட்பம் உள்ள ஒரு வகுப்பறையை தமிழ்நாடு முதலமைச்சர் தந்திருக்கிறார்கள். இது தமிழக வரலாற்றில் ஒரு மைல் கல். இந்த சுமார்ட் கிளாஸ் திட்டம் எல்லா பள்ளிகளிலும் விரைவில் தொடங்கப்படும். என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு, தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (ஊராட்சி) செ.அனிதா , நாங்குநேரி வட்டாட்சியர் இசக்கிபாண்டி மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ,மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory