» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரூ.4ஆயிரம் கோடி வங்கிக் கடன் மோசடி: போலி நிறுவன பங்குதாரரின் ஜாமீன் மனு தள்ளுபடி!
சனி 3, டிசம்பர் 2022 4:40:30 PM (IST)
ரூ.4ஆயிரம் கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் போலி நிறுவன பங்குதாரரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி சுரானா நிறுவனத்தின் இயக்குனர்கள், தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா, ராகுல் தினேஷ் சுரானா, போலி நிறுவன பங்குதாரரான ஆனந்த் உள்ளிட்டோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஆனந்த், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், மனுதாரர் இந்த வழக்கில் தவறாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கும் இந்த முறைகேட்டுக்கும் தொடர்பில்லை என வாதிட்டார். மேலும், மனுதாரர் பெரிய அளவில் படிக்கவில்லை என்பதால் நிறுவனத்தின் வரவு - செலவு குறித்து அவருக்கு எதுவும் தெரியாது எனவும் வாதிடப்பட்டது.
அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ரமேஷ் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் ஆனந்துக்கு ஜாமின் வழங்க கூடாது என தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், அதிகம் படிக்கவில்லை எனக்கூறும் மனுதாரர், பத்து போலி நிறுவனங்களுக்கு உரிமையாளராகவும், பங்குதாரராகவும் இருந்துள்ளதாகக் கூறி, ஆனந்துக்கு ஜாமீன் வழங்க மறுத்து அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், ஆனந்துக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியை கலைக்க வாய்ப்புள்ளதாகவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏவிஎம் கால்வாய் சீரமைப்பு: மத்திய அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம்.பி., வேண்டுகோள்!
புதன் 8, பிப்ரவரி 2023 8:44:40 PM (IST)

ஆவின் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
புதன் 8, பிப்ரவரி 2023 5:31:37 PM (IST)

அதிமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியல் வெளியீடு: ஓபிஎஸ் அணி பட்டியல் நிராகரிப்பு
புதன் 8, பிப்ரவரி 2023 4:45:08 PM (IST)

நெல்லையில் புதுமைப் பெண் திட்டத்தில் 2ம் கட்டமாக 1590 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை
புதன் 8, பிப்ரவரி 2023 3:53:04 PM (IST)

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியை நேரில் சந்தித்து முதல்வர் நலம் விசாரிப்பு!
புதன் 8, பிப்ரவரி 2023 3:43:16 PM (IST)

கோயில் யானைக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் குளியல் தொட்டி: அமைச்சர் திறந்து வைத்தார்
புதன் 8, பிப்ரவரி 2023 3:33:53 PM (IST)

அவன்தான்Dec 3, 2022 - 04:41:51 PM | Posted IP 162.1*****