» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை மாவட்ட எஸ்பியை கைது செய்ய உத்தரவு

சனி 3, டிசம்பர் 2022 12:11:46 PM (IST)

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை கைது செய்து அழைத்து வருமாறு, தென் மண்டல ஐஜிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், சிவந்திபட்டி கிராமத்தைச் சேர்ந்த பரமானந்தன் என்ற பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரின் நிலம் அபகரிப்பு தொடர்பாக புகார் அளித்தும் மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்திடம் பரமானந்தன் அளித்த புகாரில் அறிக்கை கேட்டும் விளக்கம் அளிக்காமல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆஜராகமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேரில் ஆஜராக இரண்டு முறை ஆணையம் வாய்ப்பு கொடுத்தும் அவர் ஆஜராகாததால், தற்போது நெல்லை எஸ்பி சரவணனை கைது செய்து ஆணையத்தில் ஆஜர் செய்யும்படி தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ராக் கார்க்கிற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் இன்று (டிச.3) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஆணையத்தின் உத்தரவை அவமதித்த காரணத்திற்காக நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory