» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை ரத்து: விஜய் வசந்த், எம்.பி. கண்டனம்

வெள்ளி 2, டிசம்பர் 2022 4:32:50 PM (IST)

மத சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை ரத்து செய்துள்ள மத்திய அரசுக்கு விஜய் வசந்த், எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் ,"பொருளாதாரம், வேலைவாய்ப்பில் பின் தங்கியிருக்கும் சிறுபான்மை இன மாணவர்கள் மற்ற மாணவர்களோடு சமவாய்ப்பினை பெற, சிறுபான்மை இன மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை அன்னை சோனியா காந்தி அவர்கள் வழிகாட்டுதலோடு, டாக்டர். மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு 2006 ஆம் ஆண்டிலிருந்து ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உதவித்தொகை வழங்கி வந்தது.

இத்திட்டத்தை, தற்போதைய மத்திய அரசாங்கம் சிறுபான்மை இன மக்களின் மீதுள்ள வெறுப்பை கல்வி பயிலும் மாணவ-மாணவியர் மீது காட்டும் வகையில் காங்கிரஸ் அரசு வழங்கி வந்த கல்வி உதவித்தொகை நிறுத்தியிருப்பது கண்டனத்துக்குரியதாகும். சிறுபான்மை இன மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை  ஊக்குவிப்பதற்காகவும், பள்ளிக் கல்விக்கான நிதிச்சுமையை குறைப்பதற்காகவும் வழங்கப்பட்ட வந்த கல்வி உதவித் தொகையினை மத்திய அரசு ரத்து செய்திருப்பது சிறுபான்மை இன மக்களின் வளர்ச்சிக்கு தடையை ஏற்படுத்தும்.

கல்வி வளர்ச்சியில் முன்னேறிய நாடுகள் தான் உலகில் வளர்ச்சியடைந்த நாடாக உள்ளது. எனவே கல்விக்காக வழங்கப்பட்ட உதவித் தொகையினை நிறுத்தி, கல்வி வளர்ச்சிக்கு இடையூறு செய்யாமல் மென்மேலும் கல்வி வளர்ச்சிக்கு மேலும் பல சிறப்பான நலத்திட்டங்களையும், உதவிகளையும் வழங்கி இந்திய தேசத்தின் கல்வி வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் வழிகாட்டுதலாக மத்திய அரசு செயல்பட வேண்டும்.

எனவே காங்கிரஸ் அரசாங்கம் கல்வி வளர்ச்சிக்கு என்ன நலத் திட்டங்களை கொண்டு வந்திருந்ததோ அதனை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory