» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிவேகத்தில் பைக் பயணம்: வீடியோ எடுத்தவாறு சென்ற 2 மாணவர்கள் விபத்தில் பலி!

வெள்ளி 2, டிசம்பர் 2022 12:11:23 PM (IST)



செல்போனில் வீடியோ எடுத்தவாறு இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் சென்ற 2 மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

சென்னை தரமணி, தந்தை பெரியார் நகர், கருணாநிதி 3-வது தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்(19). இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஹரி(17). இவர் வேளச்சேரியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வந்தார். அண்மையில் இருவரும் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் தரமணி 100 அடி சாலையில் சென்றுள்ளனர். வாகனத்தை சுமார் 114 கி.மீ. வேகத்தில் பிரவீன் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னால் அமர்ந்திருந்த ஹரி, வாகனம் எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பதை செல்போனில் வீடியோ பதிவு செய்துகொண்டே வந்துள்ளார்.

அப்போது, தரமணி சந்திப்பு அருகில் எஸ்.ஆர்.பி. டூல்ஸ் பகுதியில் இருந்து வந்த சரக்கு வாகனம் ஒன்று வளைவில் திரும்பியுள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க, இருசக்கர வாகனத்தை பிரவீன் லேசாக திருப்பியுள்ளார். அப் போது, கட்டுப்பாட்டை இழந்த வாக னம் சாலையில் சரிந்து விபத்தில் சிக்கியது. அதில், இருவரும் கீழே விழுந்து பலத்தகாயம் அடைந்தனர். இதைக் கண்ட வாகன ஓட்டிகள், பொது மக்கள் அதிர்ச்சிஅடைந்தனர். உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். 

இதையடுத்து கிண்டி போக்கு வரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில், சிறிது நேரத்தில் பிரவீன் இறந்துள்ளார். ஹரி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கிண்டி போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, சரக்கு வாகனம் ஓட்டி வந்த தரமணி, கட்ட பொம்மன் தெருவை சேர்ந்தஓட்டுநர் குணசேகரனிடம் விசாரணை நடத்தினர். 

இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த பிரவினிடம் ஓட்டுநர் உரிமம் இல்லைஎனக் கூறப்படுகிறது. அதிவேக வாகனப் பயணம் இரண்டுமாணவர்களின் உயிரைப் பறித்துள்ளது. எனவே, விபத்தைத் தவிர்க்க, அனுமதிக்கப்பட்ட அளவு வேகத்தில் ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களை கவனமுடன் இயக்கிச் செல்ல வேண்டும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory