» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படட்டும்: முதல்வர் ஸ்டாலின்!

சனி 26, நவம்பர் 2022 3:38:47 PM (IST)

இந்திய துணைகண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும் என பொருநை இலக்கியத் திருவிழாவை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். 

பாளையங்கோட்டையில் இரண்டு நாள்கள் நடைபெறும் பொருநை இலக்கியத் திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது,  "தமிழ்ச் சமூகமானது இலக்கிய முதிர்ச்சியும், பண்பாட்டின் உச்சத்தையும் அடைந்த பெருமைக்குரிய சமூகம். கீழடியைத் தொடர்ந்து சிவகளை, கொற்கை என பல அகழ்வாய்வுகள் வழியாகவும் பல்வேறு முன்னெடுப்புகள் வழியாகவும் அறிவியல்பூர்வமாக நிறுவப்படும் நமது தொன்மை நம்முடைய பெருமை.

இந்தப் பெருமையினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சென்று, அறிவுசார் சமூகத்தை வார்த்தெடுக்கும் இலக்குடன் இலக்கியத் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. தமிழின் செழுமைமிகு இலக்கிய ‌மரபுகளைப் போற்றும்‌விதமாக பொருநை, வைகை, காவிரி, சிறுவாணி, சென்னை என ஐந்து இலக்கியத் திருவிழாக்களைத் தமிழ்நாடு அரசு நடத்துகிறது. 

இதில் முதல் நிகழ்வாக, அன்னைமடியான பொருநை ஆற்றங்கரையில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்த இலக்கியத் திருவிழா சிறந்ததொரு முயற்சி. அறிவை விரிவு செய், அகண்டமாக்கு" என்று பாவேந்தர் சொன்னதற்கிணங்க நமது தமிழ் மண்ணின் செழுமைமிக்க இலக்கிய பண்பாட்டினை உலகிற்குப் பறைசாற்ற நடைபெறும் பொருநை இலக்கியத் திருவிழாவிற்கு எனது வாழ்த்துகள்.இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படட்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory