» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு: மதுரையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை!

சனி 26, நவம்பர் 2022 10:39:32 AM (IST)

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக மதுரையில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 

கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த சனிக்கிழமை ஆட்டோ ஒன்றில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் ஆட்டோவில் இருந்த பயணி மற்றும் ஓட்டுநர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் என்று கர்நாடக மாநில காவல்துறை அறிவித்தது. 

மங்களூா் குக்கா் குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவா் கா்நாடக மாநிலம், சிவமொக்கா மாவட்டம், தீா்த்தஹள்ளி பகுதியைச் சோ்ந்த முகமது ஷெரீக் (24) என்பது தெரியவந்தது. அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் முக்கிய குற்றவாளியாக அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த விசாரணையை கர்நாடக காவல் துறையினர் விசாரித்து வந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மத்திய உள் துறை அமைச்சகம் தற்போது மாற்றி உத்தரவிட்டுள்ளது.  இந்நிலையில், மதுரை டவுன்ஹால் ரோடு, கட்ராபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory