» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
களக்காடு மலையடிவாரத்தில் வனவிலங்கு வேட்டை: தோட்ட காவலாளி கைது!
வெள்ளி 25, நவம்பர் 2022 12:23:46 PM (IST)
மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடிய ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

இதில், கீழவடகரையில் உள்ள ஒரு குளத்துப்பகுதியில் கரடியின் உடல் புதைக்கப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று தோண்டி பார்த்த போது கரடியின் எலும்பு கூடு மற்றும் உடல் பாகங்கள் மீட்கப்பட்டது. கால்நடை மருத்துவர் குழுவினர் ஆய்வில் அந்த கரடி உயிரிழந்து 15 நாட்கள் ஆகியிருக்கலாம் என்று தெரிய வந்தது. இதுபற்றி வனத்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘கீழவடகரை மலையடிவாரத்தில் உள்ள விவசாய தோட்டங்களில் ஒரு கும்பல் சட்டவிரோதமாக மின்சார வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாடி வந்துள்ளது. மின்வேலியில் சிக்கி உயிரிழந்த கரடியை தான் அந்த கும்பல் குளத்தில் குழி தோண்டி புதைத்துள்ளனர். மின்வேலி மூலம் கடமான், பன்றி, முயல், உடும்பு உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி கறியை பங்கு போட்டு வந்துள்ளனர்.
பல ஆண்டுகளாக இந்த வேட்டை தொடர்ந்துள்ளது. மின்வேலியில் கரடி போன்ற விலங்குகள் சிக்கி பலியானால் ரகசியமாக புதைத்ததும் அம்பலமாகியுள்ளது’ என்றனர். இந்த வேட்டை கும்பலின் வலையில் சிக்கி இதுவரை 100க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் உயிரிழந்திருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இதுதொடர்பாக தோட்டக் காவலாளியான நாகன்குளத்தை சேர்ந்த கணேசன் (54) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் வேட்டையாடப்பட்ட வனவிலங்குகளின் கறியை முக்கிய பிரமுகர்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் பங்கு போட்டது தெரியவந்தது. இதையடுத்து விசாரணைக்கு பின் கணேசனை வனத்துறையினர் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளை சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள 20க்கும் மேற்பட்டோரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏவிஎம் கால்வாய் சீரமைப்பு: மத்திய அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம்.பி., வேண்டுகோள்!
புதன் 8, பிப்ரவரி 2023 8:44:40 PM (IST)

ஆவின் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
புதன் 8, பிப்ரவரி 2023 5:31:37 PM (IST)

அதிமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியல் வெளியீடு: ஓபிஎஸ் அணி பட்டியல் நிராகரிப்பு
புதன் 8, பிப்ரவரி 2023 4:45:08 PM (IST)

நெல்லையில் புதுமைப் பெண் திட்டத்தில் 2ம் கட்டமாக 1590 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை
புதன் 8, பிப்ரவரி 2023 3:53:04 PM (IST)

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியை நேரில் சந்தித்து முதல்வர் நலம் விசாரிப்பு!
புதன் 8, பிப்ரவரி 2023 3:43:16 PM (IST)

கோயில் யானைக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் குளியல் தொட்டி: அமைச்சர் திறந்து வைத்தார்
புதன் 8, பிப்ரவரி 2023 3:33:53 PM (IST)
