» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கட்சியிலிருந்து ரூபி மனோகரனின் நீக்கத்திற்கு தடை: காங்கிரஸ் தலைமை அறிவிப்பு!

வெள்ளி 25, நவம்பர் 2022 11:18:38 AM (IST)

காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்எல்ஏ ரூபி மனோகரனை நீக்கி ஒழுங்கு நடவடிக்கைக் குழு மேற்கொண்ட நடவடிக்கைக்கு கட்சித் தலைமை தடை விதித்துள்ளது. 

கடந்த நவ. 15 ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாகத் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் கே.ஆர். ராமசாமி நேற்று அறிவித்தார். 

இந்நிலையில் இந்த ஒழுங்கு நடவடிக்கை முறையற்றதாக இல்லை என்பதாலும் இயற்கை நீதியின் கொள்கைக்கு முரணாக இருப்பதாலும் ரூபி மனோகரனின் நீக்கத்திற்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  மேலும், தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின்  செயல்பாடு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory