» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மெட்ராஸ் ஐ அறிகுறிகள் இருந்தால் சிகிச்சைக்கு செல்ல வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்

வியாழன் 24, நவம்பர் 2022 5:03:31 PM (IST)

கண் நோய் அறிகுறிகள் இருந்தால் அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பருவமழை காலத்தில் வழக்கமாக நோய்கிருமிகள் அதிக அளவில் பெருகுகிறது. ‘மெட்ராஸ் ஐ’ – கண்வலி என்பது ஜலதோசத்தை உண்டாக்கும் அடினோ வைரஸ், மற்றும் கெர்பஸ் சிம்ளக்ஸ், என்டிரோ வைரஸ் என்னும் வைரஸ் கிருமியால் உண்டாகிறது.

இது கண்களில் நீர் வடிதலை உருவாக்குகிறது. 50% மக்களுக்கு தானாகவே சரியாகிவிடும். அதிக பாதிப்பை உணர்ந்தவர்கள் மட்டுமே மருத்துவரைப் பார்க்க வேண்டியிருக்கும். இந்நோய் தாக்கம் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து 2 நாள்முதல் 15 நாட்கள் வரை நீடிக்க கூடும்.

அறிகுறிகள்:

- சிவப்பு நிற கண்கள்
- கண்களில் நீர் வடிதல்
- கண்களில் லேசான வீக்கம்
- எரிச்சல், உறுத்தல் மற்றும் அரிப்பு 

பரவுவது எப்படி:

இந்நோயானது கண்நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை பார்ப்பதால் பரவுவதில்லை. நோய் பாதிக்கப்பட்ட ஒருவரின் கண்ணீரில் சுமார் 10 கோடி வைரஸ் கிருமிகள் இருக்கும். பாதிப்புக்குள்ளான நபர் கண்களிலிருந்து வடியும் நீரை தன் கைகளால் துடைத்து பின்னர் வேறு பொருட்களை தொடும் போது இவர் கையிலுள்ள வைரஸ் அந்த பொருட்களில் தொற்றிக் கொள்கிறது. இவ்வாறு தொற்றுக்குள்ளான ஒரு பொருளை இன்னொருவர் தொடும் போது அந்த வைரஸ் கிருமிகள் அவர் கைகளில் தொற்றிக் கொள்கிறது. அவரின் கைகள், கண்களில் படும் போது அவருக்கு தொற்று ஏற்படுகிறது.

தடுப்பது எப்படி:
கைகளை அடிக்கடி சுத்தமான நீரில் சோப்பு போட்டு கழுவ வேண்டும். கைகளை அடிக்கடி ‘சானிடைசர்; பயன்படுத்தி கழுவ வேண்டும். பாதிப்பிற்குள்ளான நபர் தன்னை தனிமை படுத்திக் கொள்ள வேண்டும். பிறரது பொருள்களை தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கண்களை கைகளால் தொடவோ, கசக்கவோ கூடாது. பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவ சிகிட்சைக்கு அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவரை அணுக வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory