» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு பேருந்துகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்காவிட்டால் நடவடிக்கை! அரசு எச்சரிக்கை

வியாழன் 24, நவம்பர் 2022 10:32:56 AM (IST)

அரசு பேருந்துகளில் நடத்துநர்கள் பயணிகளிடம் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை வாங்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கை:  இந்திய அரசால் வெளியிடப்படும் ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான நாணயத்தை அரசு பேருந்துகளில் பயணிக்கும்  பொதுமக்கள் பயணச்சீட்டு வாங்க நடத்துநரிடம் வழங்கினால் மறுக்காமல் பெற்றுகொள்ள வேண்டும் என மீண்டும் ஒருமுறை அறிவுறுத்தப்படுகிறது. எக்காரணம் கொண்டும் பயணிகள் அளிக்கும் ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான நாணயத்தை பெற்றுக்கொள்ள நடத்துநர்கள் மறுக்கக்கூடாது. 

அவ்வாறு நடத்துநர்கள் நாணயத்தை பெற மறுப்பதாக புகார் பெறப்பட்டால் சம்மந்தப்பட்ட நடத்துநர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, அனைத்து கிளை மேலாளர்கள், உதவி கிளை மேலாளர்கள் ஆகியோர் இது குறித்து நடத்துநர்களுக்கு தெளிவாக எடுத்துக்கூறி அவர்களிடம் கையெப்பம் பெற்று எதிர்காலத்தில் இத்தகைய புகார் ஏதும் எழாமல் பணிபுரிய அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital







Thoothukudi Business Directory