» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

வியாழன் 24, நவம்பர் 2022 10:26:53 AM (IST)

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் - நடிகர் கமல்ஹாசன் நேற்று மாலை சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

வழக்கமான பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரை இரண்டு நாட்கள் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. லேசான காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனையில் தங்கி கமல்ஹாசன் சிகிச்சை பெற்றதாகவும் இன்று பரிசோதனைகள் முடிந்து அவர் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக, ஹைதராபாத்தில் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய நடிகர் கமல்ஹாசன் லேசான காய்ச்சல் காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு அனுமதிக்கப்பட்ட அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இரவு அவர் அங்கேயே தங்கி சிகிச்சை பெற்றார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, சிகிச்சை பெற்றது தொடர்பாக கமல் தரப்பில், இதுவரை அதிகாரபூர்வமாக ஏதும் தெரிவிக்கப்படவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory