» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நடிகர் ஆர்.கே. வீட்டில் 200 பவுன் கொள்ளை சம்பவம்: வடமாநில வாலிபர் சிக்கினார்

வியாழன் 24, நவம்பர் 2022 10:05:40 AM (IST)

நடிகர் ஆர்.கே. வீட்டில் 200 பவுன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை, வட மாநிலத்தில் தனிப்படை போலீசார் பிடித்து உள்ளனர்.

நந்தம்பாக்கம், டிபன்ஸ் காலனி, 12-வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் ஆர்.கே. என்கிற ராதாகிருஷ்ணன். இவர், எல்லாம் அவன் செயல்,அவன் இவன் உட்பட பல  திரைப்படங்களில் நடித்து உளளார். இவர் மனைவி ராஜி மற்றும், மகள், மருமகனோடு வசித்து வருகிறார். கடந்த 10-ந் தேதி ராஜி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் ராஜியை கத்தியைக் காட்டி மிரட்டி அவரது கை, கால்களை கட்டிப்போட்டனர். 

பின்னர் பீரோவில் இருந்த 200 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து ராதாகிருஷ்ணன் நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ராதாகிருஷ்ணன் வீட்டில் காவலாளியாக வேலை பார்த்த நேபாளத்தை சேர்ந்த ரமேஷ் என்கிற டிரம்மர் மாயமாகி இருந்தார். 

கொள்ளை நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு காவலாளி ரமேசுடன் அவரது உறவினர்கள் 2 பேர் நேபாளத்தில் இருந்து வந்து தங்கி உள்ளனர். கொள்ளை நடந்த நாள் அன்று காவலாளி ரமேஷ் விடுப்பு எடுத்து வெளியே சென்று இருந்தார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. அவருடன் தங்கிஇருந்த உறவினர்களும் மாயமாகி இருப்பதால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

கொள்ளையர்களை பிடிக்க பரங்கிமலை துணை கமிஷனர் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை, வட மாநிலத்தில் தனிப்படை போலீசார் பிடித்து உள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் தலைமறைவான வீட்டின் காவலாளி மற்றும் அவருடன் தங்கி இருந்த உறவினர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory