» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பத்திரிக்கையாளர்களுக்கு நலவாரியம் அமைத்த தமிழக அரசுக்கு டியூஜே சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம்!

செவ்வாய் 22, நவம்பர் 2022 11:58:35 AM (IST)



பத்திரிக்கையாளர்களுக்கு நலவாரியம் அமைத்துள்ள தமிழக அரசுக்கு இராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு பத்திரிக்கையாளர்களின் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

இராமநாதபுரத்தில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்களின் சங்கம் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் கோட்டைச்சாமி தலைமையில் நடைபெற்றது. தேசியக்குழு உறுப்பினர் மாரிமுத்து, மாநில நிர்வாக குழு உறுப்பினர் குணாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் R.சரவணன் வரவேற்றார். 

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு பத்திரிக்கையாளர்களின் சங்க (TUJ) மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்கள், மாநில பொதுச்செயலாளர் கு.வெங்கட்ராமன் கலந்து கொண்டு நல வாரியம் அமைத்து தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், செய்தி துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தும், மூத்த பத்திரிக்கையாளரும், டியூஜேயின் மாவட்ட கௌரவத் தலைவருமான மூர்த்தி அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கியதற்க்கும் நன்றி தெரிவித்தும், சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்தும்,சங்கத்தின் வருங்கால வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கினர்.

முன்னதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், டியூஜேயின் மாவட்ட கௌரவத் தலைவர் மூர்த்தி ஓய்வூதிய திட்ட ஆணையினை மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், மாநில பொதுச் செயலாளர் கு.வெங்கட்ராமன், டெல்டா மண்டல செயலாளர் எழில், மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி,உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் முன்னிலையிலும் வழங்கி கௌரவித்தார். மாவட்ட ஆட்சியருக்கு TUJ-ன் 20-வது மாநில மாநாடு மலர் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் காசி விஸ்வநாதன், மாவட்டத் துணைத் தலைவர் நாராயணமூர்த்தி, மாவட்ட ஆலோசகர் குகன், மாவட்ட துணைச் செயலாளர் ஜகுபர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் N.அரசகுமாரன்,மாவட்ட இணைச்செயலாளர் ஜெயந்தன், மற்றும் நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். இக்கூட்டத்திற்கு இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, திருவாடனை, ஆர்.எஸ்.மங்கலம், கீழக்கரை, இராமேஸ்வரம் ஆகிய தாலுகாகளை சேர்ந்த டி.யூ.ஜே நிர்வாகிகள்,உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட செய்தி தொடர்பாளர் சு.சுதாகர் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory