» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழறிஞர் அவ்வை நடராஜன் மறைவு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

செவ்வாய் 22, நவம்பர் 2022 10:23:10 AM (IST)



மூத்த தமிழறிஞர் அவ்வை நடராசன் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

மூத்த தமிழறிஞர் அவ்வை நடராசன் (87) அகவை மூப்பின் காரணமாக இயற்கை எய்தியதை அடுத்து அன்னாரின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பெருந்தகை அவ்வை நடராசன் அவர்களின் தமிழ்ப் பணிகளை கெளரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், செம்மொழி நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவருமான மூத்த தமிழறிஞா் அவ்வை நடராசன் (86) உடல்நலக் குறைவு, வயது மூப்பு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானாா். கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவா், சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திங்கள்கிழமை மாலை காலமானாா்.

அவ்வை நடராசன் பெயரில் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அறக்கட்டளை நிறுவப்பெற்று ஆண்டுதோறும் அவரது மேடைத் தமிழ் தொடா்பான உரைநிகழ்வுகள் நடைபெறுகின்றன. அவ்வை நடராசன் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி அமைத்த ஐம்பெருங்குழுவின் உறுப்பினா் ஆவாா். அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஜொ்மனி, சிங்கப்பூா், மலேசியா, இலங்கை, ரோம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளாா்.

குடும்பம்: தமிழறிஞா் அவ்வை நடராசனின் மனைவியும் குழந்தை நல மருத்துவருமான தாரா நடராசன் 2020-ஆம் ஆண்டு காலமானாா். அவ்வை நடராசன்- தாரா நடராசன் தம்பதிக்கு தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள், மருத்துவா் கண்ணன் (ஆஸ்திரேலியா) மருத்துவா் பரதன் (தென்னாப்பிரிக்கா) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனா். மறைந்த அவ்வை நடராசனின் இறுதிச் சடங்குகள் சென்னை மயிலாப்பூரில் இன்று (நவ.22) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory