» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமாரகோயில் பகுதியில் ரூ.29 இலட்சம் சாலைப் பணி : அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.
புதன் 5, அக்டோபர் 2022 5:38:07 PM (IST)

பத்மநாபுரம் நகராட்சி பகுதியில் ரூ.29 இலட்சம் மதிப்பிலான சாலைப் பணியினை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட, குமாரகோயில் பகுதியில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை சீரமைப்புப்பணியினை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் இன்று (05.10.2022) துவக்கி வைத்து தெரிவிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு பொதுமக்களின் நலன் கருதி சாலை சீரமைப்பு பணிகள், சாலைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
அதனடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள் பேரூராட்சிகள், ஊராட்சிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்றையதினம் ரூ.29 இலட்சம் மதிப்பில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மீட்பு பணிகள் திட்டத்தின் கீழ் பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட குமாரக்கோயில் முதல் மேலங்கோடு வரை சாலை சீரமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இப்பணியினை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், பத்மநாபுரம் நகர்மன்ற தலைவர் அருள்சோபன், கேட்சன், வீர வர்க்கீஸ், அருளானந்த ஜார்ஜ், உதவி பொறியாளர் தனேசேகர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக அமருவார்: அண்ணாமலை நம்பிக்கை
புதன் 27, செப்டம்பர் 2023 12:30:56 PM (IST)

சமூக வலைதளத்தில் பிரச்சினையை தூண்டும் வகையில் வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது
புதன் 27, செப்டம்பர் 2023 11:37:16 AM (IST)

பா.ஜனதா பற்றி கருத்து சொல்ல நிர்வாகிகளுக்கு தடை: அ.தி.மு.க. தலைமை உத்தரவு
புதன் 27, செப்டம்பர் 2023 11:08:58 AM (IST)

கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதால் எங்களுக்கு நஷ்டம் இல்லை: எச்.ராஜா பேட்டி
புதன் 27, செப்டம்பர் 2023 10:34:10 AM (IST)

இந்து முன்னணி நிர்வாகியை தாக்கிய தி.மு.க. கவுன்சிலர் கைது: நெல்லையில் பரபரப்பு!
புதன் 27, செப்டம்பர் 2023 10:30:31 AM (IST)

சீமான் தொடர்ந்த வழக்கில் விஜயலட்சுமி நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு
புதன் 27, செப்டம்பர் 2023 10:07:02 AM (IST)
