» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கிராம உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: தமிழக அரசு உத்தரவு
செவ்வாய் 4, அக்டோபர் 2022 12:33:06 PM (IST)
தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில் 1.10.2019 தேதியில் இருந்து 30.9.2022 வரை தமிழகம் முழுவதும் 2,748 கிராம உதவியாளர் காலியிடங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த காலிப்பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி எந்தவித விதிமீறலும் இல்லாமல் கிராம உதவியாளர் காலியிடங்களை நிரப்புமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதற்காக பெறப்படும் விண்ணப்பங்களை நவம்பர் 14ம் தேதி பரிசீலித்து, முறையான நேர்காணல் நடத்தி டிசம்பர் 19-ம் தேதிக்குள் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும். மேலும் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை டிசம்பர் 19-ந்தேதி வெளியிட்டு அன்றே பணி ஆணைகளை வழங்க வேண்டும். இதற்கான எழுத்துத்திறன் தேர்வை கண்காணிக்க தாலுகா அளவில் துணை ஆட்சியரை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்க
கிராமத்தை பற்றிய விவரங்கள் அல்லது நிலவகைப்பாடுகள் அல்லது கிராம கணக்குகள் அல்லது மாவட்ட ஆட்சியர் கூறும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத செய்யலாம். வாசிப்பு திறனை அறிந்து கொள்வதற்காக எந்த ஒரு புத்தகத்திலும் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்க சொல்லலாம்.
தாசில்தார்கள் மூலம் தாலுகா அளவில் மேற்கொள்ளப்படும் ஆட்கள் தேர்வு, முறையாக விதிகளை பின்பற்றி நடைபெறுகிறதா? என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் எந்தெந்த தேதியில் கிராம உதவியாளர் தேர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்? என்பதையும் அதற்கான விதிகள், வழிகாட்டுதல்களை தாசில்தார்களுக்கு ஆட்சியர்கள் சுற்றறிக்கையாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடன் வாங்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்: திமுக அரசுக்கு த.மா.கா. கண்டனம்
வியாழன் 1, ஜூன் 2023 5:39:40 PM (IST)

தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவர் ஆககலாம்: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
வியாழன் 1, ஜூன் 2023 5:09:32 PM (IST)

அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி: ஆட்சியர் தகவல்
வியாழன் 1, ஜூன் 2023 5:02:53 PM (IST)

காதல் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர், மாமியார், மாமனார் கைது!
வியாழன் 1, ஜூன் 2023 4:01:00 PM (IST)

ஜூன் 7ம் தேதிக்கு முன் பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை - அமைச்சர் எச்சரிக்கை!!
வியாழன் 1, ஜூன் 2023 12:13:16 PM (IST)

குமரி தந்தை மார்ஷல் நேசமணியின் 55வது நினைவு தினம் : அமைச்சர் மனோ தங்கராஜ் மரியாதை
வியாழன் 1, ஜூன் 2023 11:36:06 AM (IST)
