» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 2.80 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம்: முதல்வ‌ர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

சனி 24, செப்டம்பர் 2022 5:06:33 PM (IST)தமிழகத்தின் வனப்பரப்பை அதிகப்படுத்தும் நோக்கில் நடப்பாண்டில் முதற்கட்டமாக 2.80 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்வ‌ர்  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

தமிழக வனத்துறை சார்பில் இயற்கை வளங்களை காக்கும் நோக்கத்தில் தமிழகத்தில் பசுமை இயக்கம் தொடக்க விழா இன்று காலை செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பசுமை தமிழகம் இயக்கத்தினை தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்து சிறப்புரையாற்றினார்.

தமிழகத்தில் 23.8 சதவீதமாக உள்ள காடுகளின் பரப்பளவு 10 ஆண்டில் 33 சதவீதமாக அதிகரிக்க இந்த பசுமை தமிழகம் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. மக்களின் பங்களிப்போடு இயற்கை வளங்களை காக்க இந்த திட்டத்தை அரசு தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் கீழ் 2022-23 நிதி ஆண்டில் தமிழகத்தில் 2.8 கோடி மரங்களை நட அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. 

விழாவில் பங்கேற்பதற்காக வண்டலூர் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.வண்டலூர் ரெயில் நிலையம் எதிரில் மாவட்ட தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.


மக்கள் கருத்து

SubramaniNov 17, 2022 - 12:38:54 AM | Posted IP 162.1*****

நான் தூத்துக்குடி மாவட்டம் யாரிடம் கூறவேண்டும் என்று எனக்கு தெரியவில்லை அரசு அதிகாரிகள் தனி ஒரு நபருக்கு ஜாதகமாக செயல்பட்டு இதனை செய்யல்களில் ஈடுபட்டுள்ளனர் இதனை சரியான முறையில் விசார்ன்னை நடத்தி நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன் ஐயா

SubramaniNov 17, 2022 - 12:30:31 AM | Posted IP 162.1*****

அரசு இவலோவு சலுகை குடுத்து மரங்களை வளர்க்க சொல்லுது ஆனால் இன்று17112022 எங்கள் வீட்டின் அருகில் போது ஊரணிஇல் வளர்த்து வந்த 40 மரங்களை அரசு அதிகரிங்கள் புடுங்கி விட்டனர் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க போறீங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory