» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க இணையதளம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

வெள்ளி 23, செப்டம்பர் 2022 12:29:03 PM (IST)



பட்டா மாறுதலுக்கு இணையவழி மூலமாக விண்ணப்பிக்கும் வசதியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நில உரிமையாளர்கள் பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை பொது சேவை மையங்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்து, அவை இணையவழியில் பரிசீலிக்கப்பட்டு, பட்டாமாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (23ம் தேதி), வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ‘எங்கிருந்தும் எந்நேரத்திலும்’ என்ற இணையவழி சேவையின் மூலமாக பொதுமக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியை தொடங்கி வைத்தார்.

மேலும் பொதுமக்களின் வசதிக்காக எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் பட்டா மாறுதல் கோரி https://tamilnilam.tn.gov.in /citizen/ என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தொடங்கி வைத்தார்.

இணையதளம் விண்ணப்பிப்பது எப்படி?

https://tamilnilam.tn.gov.in என்ற இணையதளத்தில் பெயர், இமெயில், கைப்பேசி எண் ஆகியவற்றை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதில் விண்ணப்பிக்க கிரையப் பத்திரம், செட்டில்மென்ட் பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம், தானப் பத்திரம், பரிவர்தனை பத்திரம், அக்குவிடுதலைப் பத்திரம் ஆகிய ஆவணங்கள் தேவை

தேவையான ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.

நில உட்பிரிவுக்கான கட்டணம் மற்றும் செயலாக்க கட்டணங்களை இணையவழியிலேயே செலுத்தலாம்.

பட்டா மாறுதல் அங்கீகரிக்கப்பட்ட பின்னர், பட்டா உத்தரவின் நகல், பட்டா, புலப்படச்சுவடி ஆகியவற்றை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital







Thoothukudi Business Directory