» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இந்து மகாசபா தலைவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: கார் கண்ணாடிகள் உடைப்பு
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 11:33:42 AM (IST)

கடையம் அருகே இந்து மகாசபா தென்மண்டல தலைவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பாப்பான்குளத்தை அடுத்த மடவார்விளாகத்தைச் சேர்ந்தவர் இசக்கிராஜா (46). இவர் அகில பாரத இந்து மகாசபா தென்மண்டல தலைவராகவும், தென்காசி மாவட்ட தலைவராகவும் உள்ளார். இரவில் அவரது வீட்டின் வெளியே திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி சென்று பார்த்தனர். நாட்டு வெடிகுண்டு வீச்சு அப்போது வீட்டின் வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறிய நிலையில் கிடந்தது.
அங்கு நிறுத்தப்பட்டு இருந்த காரின் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடிகள் உடைத்து நொறுக்கப்பட்டு கிடந்தன. அங்குள்ள கண்காணிப்பு கேமராவும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது. காரின் கண்ணாடிகளை மர்மநபர்கள் உடைத்துவிட்டு, நாட்டு வெடிகுண்டையும் வீசிச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், ஆலங்குளம் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்க்கை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அங்கு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக அமருவார்: அண்ணாமலை நம்பிக்கை
புதன் 27, செப்டம்பர் 2023 12:30:56 PM (IST)

சமூக வலைதளத்தில் பிரச்சினையை தூண்டும் வகையில் வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது
புதன் 27, செப்டம்பர் 2023 11:37:16 AM (IST)

பா.ஜனதா பற்றி கருத்து சொல்ல நிர்வாகிகளுக்கு தடை: அ.தி.மு.க. தலைமை உத்தரவு
புதன் 27, செப்டம்பர் 2023 11:08:58 AM (IST)

கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதால் எங்களுக்கு நஷ்டம் இல்லை: எச்.ராஜா பேட்டி
புதன் 27, செப்டம்பர் 2023 10:34:10 AM (IST)

இந்து முன்னணி நிர்வாகியை தாக்கிய தி.மு.க. கவுன்சிலர் கைது: நெல்லையில் பரபரப்பு!
புதன் 27, செப்டம்பர் 2023 10:30:31 AM (IST)

சீமான் தொடர்ந்த வழக்கில் விஜயலட்சுமி நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு
புதன் 27, செப்டம்பர் 2023 10:07:02 AM (IST)
