» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கொடுக்கல் வாங்கல் தகராறில் கட்டடத் தொழிலாளி அடித்து கொலைB: நெல்லையில் பயங்கரம்!

வியாழன் 18, ஆகஸ்ட் 2022 11:17:10 AM (IST)

நெல்லையில் கொடுக்கல் வாங்கல் தகராறில் கட்டடத் தொழிலாளியை அடித்து கொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை சந்திப்பு சி.என் கிராமம் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் கட்டட பணிகளுக்கு கூலித் தொழிலாளியாக சென்று வருகிறார். இவருக்கு 3 மகள்களும் 1 மகனும் உள்ளார். இவர் தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் நட்டார் குளத்தை கணேசன் என்பவரிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.50ஆயிரம் கடன் பெற்றதாகவும் இதற்கு வாரந்தோறும் சனிக்கிழமை அன்று சிறிய அளவிலான பணம் கொடுத்து கடனை கழித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று இரவு ராஜா, லட்சுமிபுரம் ஊர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அம்மன் கோயில் அருகே அமர்ந்து இருந்தபோது, அங்கு வந்த கணேசன், பணத்தை கேட்டு ராஜாவிடம் வாக்குவாதம் செய்ததாகவும் அப்போது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ராஜாவை தாக்கியதில் தலையில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உள்ளார். இதனை அம்மன் கோயில் அருகே அமர்ந்திருந்தது ஊர் மக்கள் கண்டு கூச்சலிட்டதை தொடர்ந்து கணேசன் அங்கிருந்து தப்பிவிட்டார்.
 
இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்த மக்கள் ராஜாவை மீட்டு வண்ணாரப் பேட்டையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு ராஜாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தவுடன் இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலை நடந்த இடத்தில் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன் கொலையாளி கணேசனையும் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory