» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் கைதான 4 பேர் குண்டர் சட்டம் பாய்ந்தது!

வியாழன் 18, ஆகஸ்ட் 2022 11:09:45 AM (IST)

ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்திய சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில், கைது செய்யப்பட்ட 4 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஈரோட்டில் 16 வயது சிறுமியிடமிருந்து கருமுட்டை எடுத்து ஈரோடு, பெருந்துறை, ஓசூா், சேலம், திருப்பதி, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் தாய், அவரது இரண்டாவது கணவா் மற்றும் தரகா் மாலதி, சிறுமியின் ஆதாா் அட்டையில் திருத்தம் செய்த ஜான் ஆகிய 4 பேரும் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்திய சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம் சம்பந்தமாக சுகாதாரத்துறை இணை இயக்குநர் தலைமையிலான குழு விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. குழுவினரும் சிறுமி மற்றும் கருமுட்டை பெற்றதாக புகார் எழுந்த மருத்துவமனைகளிடம் விசாரணை நடத்தினர். விசாரணை அடிப்படையில் மருத்துவமனைக்கு சீல் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையின் பதிவை ‘சஸ்பெண்ட்’ செய்து, ஸ்கேன் மையங்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். இதை எதிா்த்து, அந்த மருத்துவமனை சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றம், பதிவை ‘சஸ்பெண்ட்’ செய்வதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை எனக்கூறி, தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. 

இதனிடையே கருமுட்டை விவரத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண்ணுண்ணி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து கோவை மத்திய சிறையில் உள்ள 4 பேரிடமும் குண்டர் தடுப்பு சட்டத்தின் அடைப்பதற்கான கடிதத்தை வழங்கினர். 4 பேரும் போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital






Thoothukudi Business Directory