» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீட் எதிர்ப்பு பேச்சால் மாணவர்களை திசை திருப்ப கூடாது: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

சனி 2, ஜூலை 2022 5:01:17 PM (IST)நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் ரீதியான கருத்துகளை பேசி மாணவர்களை திசை திருப்ப வேண்டாம் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

தமாகா இளைஞர் அணி சார்பில் ஏழை, எளிய மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இலவச கையேடு வழங்கும் நிகழ்ச்சி,சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கத்தில் நடந்தது. மாணவர்களுக்கு இலவச கையேடுகளை கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், வழங்கினார். நிகழ்ச்சியில் தமாகா மாநிலஇளைஞர் அணி தலைவர் யுவராஜா, மாநிலபொதுச் செயலாளர்கள் விடியல் சேகர்,சக்தி வடிவேல் மற்றும் மாவட்ட இளைஞர் அணி தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் ஜி.கே.வாசன் பேசியதாவது:

நீட் தேர்வு மூலம் மாணவர்களின் கல்வித்தரம், வெளிப்படைத் தன்மை உயர வாய்ப்பு உருவாகிறது. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடுகளை கடந்து, நீட் தேர்வு மூலம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். அரசும், தனியாரும் மருத்துவக் கல்வியை வியாபார நோக்கத்துடன் பார்க்கும் தவறான கண்ணோட்டம், நீட் தேர்வால் பலிக்காமல் போகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் உயர்ந்துகொண்டு இருக்கிறது. எனவே, அரசியல்ரீதியாக நீட் தேர்வுக்கு எதிரான கருத்துகளை பேசி மாணவர்களை திசை திருப்பி முடக்கிவிடவேண்டாம். மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அரசியல் கட்சிகள் வாக்கு வங்கி லாபத்துக்காக மாணவர்களை ஏமாற்றாமல், அவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கு வசதியாக மாநில அரசின் பாடத் திட்டங்களை தரம் உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இளைஞர் அணி தலைவர் யுவராஜா பேசும்போது, ‘‘தமிழகம் முழுவதும் டாக்டராக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் மாணவர்களிடம் இந்த கையேட்டை கொண்டு சேர்ப்போம். நீட் தேர்வு நல்லதா,கெட்டதா என்று மாணவர்கள் சிந்திக்க வேண்டாம். ஏனென்றால், அது தேர்வு நேரத்தில் உங்களை பாதிக்கும். அடுத்தகட்டமாக தருமபுரியில் இதேபோன்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

இதையடுத்து, இளைஞர் அணி மாநிலத் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், பெண்கள் பாதுகாப்புக்கான சட்டம், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம், பூரண மதுவிலக்கு, அக்னி பாதை திட்டத்துக்கு வரவேற்பு, விவசாயிகள் தொலைநோக்குதிட்டம் ஆகியவற்றை நிறைவேற்றவேண்டும் என்பது உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மக்கள் கருத்து

BJP RASIGARKALJul 3, 2022 - 03:57:47 PM | Posted IP 162.1*****

NEET பற்றி தவறான கருத்துக்கள் பரப்பிய அன்புமணிக்கு சரியான பதில் கொடுத்துவிட்டார். வாழ்க .G.K .வாசன் அவர்கள்.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital
Thoothukudi Business Directory