» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் ரூ.156.25 இலட்சம் கல்வி கடன்: அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்

வெள்ளி 1, ஜூலை 2022 4:34:58 PM (IST)



நெல்லையில் ‘கல்லூரி கனவு” நிகழ்ச்சியை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்,  இன்று தொடங்கி வைத்து ரூ.156.25 இலட்சம் கல்வி கடன்களை வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் அரியகுளம் சாரதா மகளிர் கல்லூரியில் ‘நான் முதல்வன்” திட்டத்தின் கீழ்; 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ,மாணவியர்கள் உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் ‘கல்லூரி கனவு” நிகழ்ச்சியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சரவணன் சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப் ஆகியோர் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி இன்று (01.07.2022) தொடங்கி வைத்து மாணவ, மாணவியர்களுக்கு வழிகாட்டி நூல்களை வழங்கி ரூ.156.25 இலட்சம் கல்வி கடன்களை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பேசியதாவது "கல்வியில் முன்னேற்றம் அடையும்போது எல்லா துறைகளிலும் நாடு சிறந்து விளங்கும் நம் தமிழகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய முயிற்சியால் இந்தியாவிலேயே தமிழகம் கல்வியில் தலை சிறந்த மாநிலமாக திகழ்கிறது. இளம் தலைமுறையினரின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும். என்ற உன்னத நோக்கத்தோடு ‘நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ,மாணவியர்கள் உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் ‘கல்லூரி கனவு” நிகழ்ச்சியை 25.06.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

இத்திட்டத்தின் மூலம் 12ஆம் வகுப்பு முடிக்கும் மாணவ, மாணவியர்கள் எதிர்காலத்தில் உயர்கல்வி கற்பதை எளிமையாக தங்களின் திறமைக்கேற்ப நீங்களே தேர்ந்தெடுத்து படிக்க உறுதுனையாக இருக்கும். மேற்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பது பற்றியெல்லாம் நீங்கள் இணையதளத்தைப் பார்த்து அறிந்துகொள்ளக்கூடிய சூழ்நிலை இப்போது வந்திருக்கிறது. இருந்தாலும் உங்கள் மதிப்பெண் அடிப்படையில் எந்தப் படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். 

எதிர்கால வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன, இதையெல்லாம் எடுத்துக் கூறி நாங்களும் உங்களுக்கு வழிகாட்டுவதற்கான வாய்ப்புதான் இந்த நிகழ்ச்சி, நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பள்ளிக் கல்வி என்ற ஒரு படியைத் தாண்டி கல்லூரிக் கல்வியில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். மாணவர்களாகிய நீங்கள்தான் இந்த மாநிலத்தின் அறிவுச் சொத்துகள் உங்களை வளர்த்தெடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. 

அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம் தான் நம்முடைய திராவிட இயக்கம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது அதற்கான வாசற்படி தான் சமூகநீதி. அந்தச் சமூகநீதியை இட ஒதுக்கீட்டு உரிமையை சட்டமாக்கி வித்திட்டது. திராவிட இயக்கத்தின் தலைமகனான நீதிகட்சி கல்விக்காக பெருந்தலைவர் காமராசர் தமிழகம் முழுவதும் பள்ளிகளைத் திறந்தார். முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களை உருவாக்கினார்கள்.

வரும் சமூகத்தை வழிநடத்தும் ஆற்றல் படைத்தவர்களாக நீங்கள் வர வேண்டும். சாதாரண அரசு பள்ளியில் பயின்று தன்னுடைய முயற்சியாலும், திறமையாலும், இந்த நாட்டில் பல்வேறு பெரிய பொறுப்புகளை வகித்த தலைவர்களையும், அறிஞர்களையும், நீங்கள் அறிவீர்கள் கல்வியில் சிறந்து விளங்கினாலும், திட்டமிடல், விடாமுயற்சி நமது குறிக்கோள் உங்களை உயர்ந்த பொறுப்பில் அமரவைக்கும் எனவே உங்கள் கல்லூரி கனவை நினைவாக்க இந்த நிகழ்ச்சியை முழுமையாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.உங்கள் பெற்றோரின் கனவையும் உழைப்பையும், நீங்கள் புரிந்து கொண்டு படிக்க வேண்டும்.

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் சீரிய முயற்சியால் மேற்கு தொடர்ச்சி மலை வாழும் காணியின மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு கல்வித்திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்கி வருகிறது. அதனடிப்படையில் காணியின இளைஞர்கள் இரண்டு பேர் போஷ் என்ற பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிவுதற்கான பணிநியமன ஆணைகள் பெற்று சிறப்பாக பணிபுரிந்து வருகிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பதினோராம் வகுப்பு படிக்கக் கூடிய மாணவ, மாணவிகளுக்கு ஐ.ஐ.டி, ஜெ.இ.இ போன்ற நுழைவுத் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்பட்டு பல்வேறு நுழைவு தேர்வு நடத்தப்பட்டு 21 மாணவ.மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் விமானத்தில் சென்னை ஐ.ஐ.டி நிறுவனத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள கல்வி முறைகள் குறித்து தெரிந்துக்கொண்டனர். தொடர்ந்து இவர்களுக்கான பயிற்சி மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டுடன் நடத்த பட்டு வருகிறது. உங்களை வழிநடத்தி நல்ல எதிர்காலத்தை உருவாக்க தமிழ்நாடு முதலமைச்சர் கல்வித்துறையை பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார்கள். இத்திட்டங்கள் மூலம் நீங்கள் பயன் பெற்று சமூகத்தில் தலை சிறந்தவர்களாக உருவாகி இந்த நாட்டுக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை தேடித்தரவேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் 1536 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர், பேராசிரியர் ஆரோக்கியராஜ், சினிவாசன், சிவகுமார் போன்றோர்கள் பொறியியல் படிப்பில் என்னென்ன பாடத்திட்டங்கள் உள்ளது எனப்தையும் எந்த பாடத்திட்டங்கள் படித்தால் என்னென்ன வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதையும் விரிவாக எடுத்துகூறினார்கள். 

கலை மற்றும் அறிவியியல் கல்வி தொடர்பான பாடத்திட்டங்கள் குறித்தும் அந்த பாடத்திட்டங்களை பயின்றால் என்ன வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதையும் ஸ்டேல்லா மேரிஸ் கல்லூரி (சென்னை) முதல்வர் மரு.ரேனுகா ராஜரத்னம் , எடுத்துரைத்தார்கள். குயளாழைn வநஉhழெடழபல பாடத்திட்டங்கள் குறித்து விகிதா விளக்கமளித்தார்கள்.கல்லூரி மாணவ,மாணவியர்களின் தற்போது மனநிலையை மாற்றி உயர்க்கல்வி குறித்தும் அதை தோந்தெடுப்பது குறித்தும் சிவகுமார் பழனியப்பன் ஊக்கப்படுத்தும் வகையில் எடுத்துரைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ரிஷப் மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜீ , பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் தங்கபாண்டியன், மாவட்ட ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கனகராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா, மாவட்ட தேசிய தகவல் மைய மேலாளர் ஆறுமுக நயினார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் டைடஸ் ஜான்போஸ்கோ உட்பட அரசு அலுவலர்கள், மாணவ,மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory