» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அமிர்தா கல்வியியல் கல்லூரியில் விளையாட்டு விழா!

வியாழன் 30, ஜூன் 2022 12:41:12 PM (IST)நாகர்கோவில், இறச்சக்குளம், அமிர்தா கல்வியியல் கல்லூரியில் 9வது ஆண்டு விழாவானது கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. 

விழாவிற்கு அமிர்தா கல்வி நிறுவனங்களின் கல்விசார் இயக்குனர் கண்ணன் தலைமை வகித்தார். நிர்வாக மேலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர்  கிருஷ்ணகுமார் ஆண்டு அறிக்கையை சமர்பித்தார். விழாவின் தொடர்ச்சியாக மாணவ ஆசிரியர்களின் கண்கவரும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக கல்வி, விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிகளில் சிறந்த மாணவ ஆசிரியர்களுக்கான பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். இவ்விழாவினை செல்வி. ஷிவானி (மாணவ ஆசிரியை) தொகுத்து வழங்கினார்.

 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital
Thoothukudi Business Directory