» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பயன்பாடின்றி கிடப்பில் மருத்துவ உபகரணங்கள் : எம்எல்ஏ., ஆய்வு

புதன் 29, ஜூன் 2022 6:24:56 PM (IST)

திருநெல்வேலியில் பயன்பாடு இல்லாமல் கிடப்பில் இருக்கும் ரூ.4.29 மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை எம்.எல்.ஏ  செல்வபெருந்தகை ஆய்வு செய்தார்.

தமிழக சட்டமன்ற பொதுக் கணக்கு குழு தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக ஆய்வு செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி மாவட்டத்தில் குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ தலைமையில்  எம்எல்ஏ.,கள் காந்திராஜன்,  வேல்முருகன் ஜவாஹிருல்லா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் குழு தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டோம். இதில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் கடந்த அதிமுக ஆட்சியில் 2017-2018 –ம் ஆண்டு நார்வே நாட்டில் இருந்து டெங்கு , மலேரியா ஆகியவற்றை பரிசோதனை செய்யும் மருத்துவ உபகரணங்கள் 4 கோடியே 29 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டு பயன்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய மற்றும் மாநில கணக்காயக் குழு ஆய்வு செய்து, இந்த மெஷினால் அரசுக்கு பெரும் பண இழப்பு ஏற்பட்டுள்ளதாக தங்களது அறிக்கையில் கூறியுள்ளது.

இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்ட போது, 45 பைசாவில் செய்ய கூடிய சோதனையை இந்த உபகரணங்கள் மூலம் செய்தால்  ரூ.28 செலவாகிறது. மருத்துவமனையில் போதிய நிதி ஆதாரம் இல்லாததால் இந்த மெஷினை செயல்படுத்தாமல் போட்டுள்ளோம் என தெரிவித்தனர். எனவே மக்களுக்கும் பயன்படாத, அரசுக்கு பண இழப்பை ஏற்படுத்தி இந்த உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது.

இதுபோன்று மாவட்டத்தில் நான்கு மருத்துவமனைக்கு வாங்கப்பட்டுள்ளது.  எனவே இந்த உபகரணங்கள் வாங்க காரணமாக இருந்தவர்கள் யார் என கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க குழு பரிந்துரை செய்யும் என தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital


Thoothukudi Business Directory