» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருப்பதி கோவில் போல் பழனி கோவிலை தரம் உயர்த்த முடிவு

புதன் 29, ஜூன் 2022 6:14:01 PM (IST)

திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் போல் பழனி முருகன் கோவிலை மேம்படுத்தும் திட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

பழனி அருகே தாழையூத்து ஊராட்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சிகளை பார்வையிட்டார். 

பின்னர் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, பயிர்க்கடன் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு கடன்கள் நூறுக்கும் மேற்ப்பட்டோருக்கு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகள், வேளாண்மை துறை சார்பில் வேளாண் கருவிகள், புதிய குடும்ப அட்டைகள் என மூன்று கோடி மதிப்பில் 900 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

பின்னர் பேசிய அமைச்சர் சக்கரபாணி, திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் போல் பழனி முருகன் கோவிலை மேம்படுத்தும் திட்டத்திற்கு முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும். இன்னும் பத்து ஆண்டுகளில் குடிசைகள் இல்லா தமிழகமாக மாற்றும் முதல்வரின் கனவு திட்டம் நிறைவேறும் வகையில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம் விரைவு படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory