» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நடிகை மீனா கணவர் மறைவு : திரைப்பிரபலங்கள் இறுதிஅஞ்சலி

புதன் 29, ஜூன் 2022 5:35:29 PM (IST)

பிரபல திரைப்பட நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர்(48) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமான நிலையில் நடிகர் ரஜினிகாந்த், பிரபுதேவா, உள்ளிட்ட முக்கிய திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் மீனா. ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். 

மீனா கடந்த 2009ம் ஆண்டு பெங்களூருவை வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியின் மகள் நைனிகா தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்தார்.

கடந்த ஆண்டு, மீனா மற்றும் அவரது கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்குப்பின் அவர்கள் மீண்ட நிலையில், கொரோனா பக்கவிளைவுக்கு ஆளான வித்தியாசாகர், தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டு அதற்காக சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி நேற்று(ஜூன் 28) இரவு உயிரிழந்தார்.

மீனாவின் கணவர் மறைவுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். வித்யாசாகரின் உடல் சென்னையில் உள்ள மீனாவின் சைதாப்பேட்டை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபுதேவா, ரம்பா, விஜயகுமார், சேரன், மன்சூர் அலிகான், பழம்பெரும் நடிகை லட்சுமி, சங்கீதா, குஷ்பு உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் வித்யாசாகரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, மீனா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து மதியத்திற்கு மேல் வித்யாசாகரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham HospitalThoothukudi Business Directory