» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அடுத்தடுத்து 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை!

செவ்வாய் 28, ஜூன் 2022 3:30:37 PM (IST)

ஆலங்குளம் அருகே 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள தெற்கு மாயமான்குறிச்சி காளியம்மன் கோவில், கிடாரக்குளம் அடைக்கல சாஸ்தா கோவில் மற்றும் அய்யனார்குளம் இசக்கியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் உண்டியல்களை நேற்று  இரவு மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த காணிக்கையை திருடிச் சென்றுள்ளனர்.  இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் தனித்தனியே அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital


Thoothukudi Business Directory