» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அக்னிபத் திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் ஓயாது : விஜய்வசந்த் எம்.பி. பேச்சு!

திங்கள் 27, ஜூன் 2022 5:51:19 PM (IST)அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிடும் வரை காங்கிரஸ் கட்சியின் போராட்டம் ஓயாது என விஜய்வசந்த் எம்.பி. பேசினார். 

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு எதிராக மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து விஜய் வசந்த் எம்.பி. பேசியபோது கூறியதாவது: அக்னிபத் திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்தும் போராட்டம் மக்களுக்காக நடத்தப்படும் போராட்டம் ஆகும். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை வாபஸ் பெறும் வரை தங்களது போராட்டம் ஓயாது என்று ராகுல் காந்தி கூறினார். 

இதன் காரணமாக வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது. இதே போல தற்போது அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெறும் வரை போராட்டம் நடத்தப்படும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். எனவே, அக்னிபத் திட்டத்தை கைவிடும் வரை காங்கிரஸ் கட்சியின் போராட்டம் ஓயாது. ராகுல் காந்தியை விசாரணை என்ற பெயரில் அமலாக்கத்துறையினர் அலைக்கழிப்பு செய்தது மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும் என அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

KK MAKKALJun 28, 2022 - 05:28:33 PM | Posted IP 162.1*****

DO YOU KNOW ABOUT அக்னிபத். FIRST YOU STUDY ABOUT IT AND EXPLAIN, THEN OPPOSE. CONGRESS DONT KNOW ABOUT ANY GOOD SYSTEM IN INDIA.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital


Thoothukudi Business Directory