» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் நாளை குரூப்-2 தேர்வு : 3,012 தேர்வு மையங்களில் 11.78 லட்சம் பேர் எழுதுகிறார்கள்!

வெள்ளி 20, மே 2022 3:10:39 PM (IST)

தமிழகத்தில் நாளை நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வை 11.78 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.

தமிழக அரசு துறைகளில் சார் பதிவாளர், நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட பதவிகள் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் இந்த தேர்வுகள் தமிழகம் முழுவதும் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேர்வை நாளை 11.78 லட்சம் பேர் எழுதுகிறார்கள். இவர்களில் 6.82 லட்சம் பேர் பெண்கள் ஆவர். தமிழ் வழியில் படித்த 80 ஆயிரம் பேரும் இந்த தேர்வை எழுத உள்ளனர்.

தேர்வில் பொது தமிழ் பிரிவை 9.47 லட்சம் பேரும், பொது ஆங்கில பிரிவை 2.31 லட்சம் பேரும் தேர்வு செய்துள்ளனர். 38 மாவட்டங்களில் 3,012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எந்தவித குளறுபடிகளும் இல்லாமல் குரூப்-2 தேர்வை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக 300-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். சுமார் 6,500 ஆய்வு குழுக்கள் நாளை களம் இறங்க உள்ளன.

இவர்கள் தேர்வு நடைபெறும் மையங்களில் திடீரென புகுந்து ஆய்வு செய்வார்கள். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோ கிராபர்களும் தேர்வு மையத்தில் நாளை வீடியோ பதிவு செய்ய உள்ளனர். தேர்வின் போது முறைகேட்டில் ஈடுபடும் தேர்வர்கள் உடனடியாக தேர்வு மையத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். அவர்கள் மீது குற்ற நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வில் பங்கேற்க 9 மணிக்கு பின்னர் வருபவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டுடன் ஆதார், பான், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் ஒரிஜனல் அட்டையை எடுத்து வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவோர் பால் பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory