» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி மாவட்டத்தில் 128 மையங்களில் 37,418 பேர் குரூப் 2 தேர்வு எழுதுகிறார்கள் : ஆட்சியர் தகவல்!

புதன் 18, மே 2022 5:21:50 PM (IST)

குமரி மாவட்டத்தில் வருகிற 21ம் தேதி 128 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெறுகிறது. 37,418 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், அனைத்து வட்டங்களுக்குட்பட்ட பள்ளி/கல்லூரிகளில் வைத்து 21.05.2022 (சனிக் கிழமை) அன்று காலை 09.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு II (நேர்முகத்தேர்வு பதவிகள் (ம) நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்) (தொகுதி II & IIA) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நடைபெறவுள்ளது.

இத்தேர்வானது மாவட்ட முழுவதும் 128 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வினை கன்னியாகுமரி மாவட்டத்தில் 37,418 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர். மேற்படி தேர்வுக்காக 10 பறக்கும் படைகள், 30 இயக்க ஊர்திகள் (Mobile Unit) மற்றும் 128 ஆய்வு அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 128 மையங்களுக்கும் காவல் துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேற்படி தேர்வுக் கூடங்களில் 128 வீடியோகிராபர்கள் மூலம் தேர்வு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும். காலை 8.59 மணிக்கு பிறகு வருபவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அனுமதிக்கும் உபகரணங்கள் மட்டுமே எடுத்து செல்ல வேண்டும். செல்போன், கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்து செல்ல அனுமதி கிடையாது. தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுலவகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்.04652-231077-இல் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory