» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குரூப் 2 தேர்வுகள் மே 21ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் - டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி

செவ்வாய் 17, மே 2022 5:22:05 PM (IST)

தமிழகத்தில் 21ஆம் தேதி திட்டமிட்டபடி குரூப் 2 தேர்வுகள் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் , "குரூப் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி வரும் 21ஆம் தேதி நடைபெறும். தேர்வுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வுக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வரவேண்டியது கட்டாயமாகும். இதன்படி 8.30 மணிக்கே தேர்வர்கள் வர வேண்டும். 8.59 மணிக்கு பிறகு வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கு கடந்த ஆண்டை விட 2 லட்சம் பேர் கூடுதலாக விண்ணப்பம் செய்துள்ளனர். தமிழ் வழியில் படித்த 79,942 பேர் விண்ணப்பித்துள்ளனர். குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கு மொத்தமாக 11,78,175 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலை நகரங்கள் மற்றும் குறிப்பிட்ட தாலுக்காக்களை உள்ளடக்கிய 117 தேர்வு மையங்களில் 4,012 தேர்வுக்கூடங்களில் தேர்வு நடைபெறும்” என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory