» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆதிதிராவிடர் பழங்குடியினர் துறைகளில் 10,402 பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு!

செவ்வாய் 17, மே 2022 4:27:27 PM (IST)

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் 10,402 பணியிடங்களை முகமைகள் மூலம் நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

2021-2022ம் ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டதொடரில் கவர்னர் உரையில் அரசுத்துறைகளில் காணப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள் சேர்ப்பு முகாம் மூலம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

அந்த அறிவிப்பை செயல்படுத்த தலைமைச் செயலக துறைகளிடமிருந்து பிரிவு வாரியாக உறுதி செய்யப்பட்டு பெறப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில்  ஆதிதிராவிடருக்கு 8,173 இடங்களும், பழங்குடியினருக்கு 2,229 இடங்களும் மொத்தம் 10,402 குறைவு பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று அரசாணையை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டது. இந்த பணியிடங்களை முகமைகள் மூலம் நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital



Thoothukudi Business Directory