» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் திடீர் மாயம்: காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்!

செவ்வாய் 17, மே 2022 12:36:23 PM (IST)

தக்கலை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மாயமான இளம்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைந்தார்.

குமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள கேரளபுரம், வேப்பங்கோணத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகள் மோனிஷா (23), பட்டதாரி. இவருக்கும் குலசேகரம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து இருவீட்டாரும் திருமண வேலைகளை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் இருந்த மோனிஷா திடீரென மாயமானார். 

அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து இளம்பெண்ணின் தாயார் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார், மாயமான இளம்பெண்ணை தேடி வந்தனர்.  இந்த நிலையில் மோனிஷா நேற்று இரவு 8 மணிக்கு வட்டம் காலனியை சேர்ந்த அனிஷ் (26) என்ற வாலிபருடன் தக்கலை காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். 

அவர்கள் போலீசாரிடம் கூறும் போது, தாங்கள் இருவரும் 3 மாதமாக காதலித்து வந்ததாகவும், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி மணலியில் உள்ள ஒரு இந்து கோவிலில் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறினர். இதையடுத்து போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மோனிஷாவின் பெற்றோர் மகளின் திருமணத்தில் உடன்பாடில்லை என கூறினர். ஆனால் இருவரும் திருமண வயதை எட்டியுள்ளதால் போலீசார் அவர்களை சேர்த்து வைத்து அனுப்பினர்.


மக்கள் கருத்து

MAKKALமே 17, 2022 - 03:35:52 PM | Posted IP 162.1*****

பெண்கள் தொலைக்காட்சியில் சீரியல் பார்ப்பதை தவிர்க்கவும். பெண்களுக்கு பெரியவர்கள் ADVICE பண்ணவேண்டும். சீரியல் பார்த்தால் இதுதான் நடக்கும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory