» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி பாஜகவில் இணைந்தார்!

செவ்வாய் 17, மே 2022 11:53:42 AM (IST)தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவர் பண்ருட்டி வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி பாஜகவில் இணைந்துள்ளார். 

தமிழக பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை தலைவர் செந்தில்குமார், திண்டுக்கல் பாமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரவிச்சந்திரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகனின் விவாகரத்து பெற்ற மனைவி காயத்ரி, அதிமுக ஒன்றிய கவுன்சிலர் பிரவீன்குமார், செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் பாஜகவில் தங்களை இணைத்து கொண்டனர். தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி பாஜகவில் இணைந்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory