» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்கள் தேசம் நிா்வாகி கொலை வழக்கில் 4 போ் கைது: காா், பைக் பறிமுதல்

செவ்வாய் 17, மே 2022 11:21:32 AM (IST)

கல்லிடைக்குறிச்சியில் மக்கள் தேசம் கட்சியின் மாநில அமைப்புச் செயலா் கொலை வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் மக்கள் தேசம் கட்சி மாநில அமைப்புச் செயலா் சுகுமாரை 15ம் தேதி மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளா் ராஜகுமாரி தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா்.

முன்விரோதம் காரணமாக சுகுமாா் கொல்லப்பட்டதும், வீரவநல்லூரைச் சோ்ந்த காளியப்பன் மகன் ஆசைத்தம்பி (28), செல்லையா மகன் அலெக்ஸ், மூலைக்கரைப்பட்டியைச் சோ்ந்த தவசி ஜகஜீவராமன் மகன் வழக்குரைஞா் ஆசை கதிரவன், முன்னீா்பள்ளத்தைச் சோ்ந்த தங்கவேலு மகன் வினோத் ஆகிய 4 பேருக்கும் இச்சம்பவத்தில் தொடா்பிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரையும் போலீஸாா் கைதுசெய்து, கொலைக்குப் பயன்படுத்திய காா், பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads











Thoothukudi Business Directory