» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கல்குவாரி விபத்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை : விஜயகாந்த் வலியுறுத்தல்

திங்கள் 16, மே 2022 5:13:47 PM (IST)

கல்குவாரி விபத்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

நெல்லை அருகே உள்ள அடைமிதிப்பான்குளத்தில் கல் குவாரியில் ராட்சத பாறை சரிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் சிக்கினர். இதில் 3 பேர் மீட்கப்பட்டு, அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் செல்வம் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக அறிவித்தார்.

விபத்தில் சிக்கியுள்ள மேலும் 3 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நெல்லை கல்குவாரி விபத்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory