» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மற்ற மாநிலங்களில் தமிழை 3-வது மொழியாக சேர்க்க முயற்சி செய்வேன் : ஆளுநர் ஆர்.என்.ரவி

திங்கள் 16, மே 2022 3:01:17 PM (IST)

மற்ற மாநிலங்களில் தமிழை 3-வது மொழியாக சேர்ப்பதற்கு முயற்சி செய்வேன் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: உலகில் மிக தொன்மையான மொழி தமிழ் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டதை போல தமிழ் மிகவும் பழமையான மொழி. முதல் அமைச்சர் சட்ட சபையில் அறிவித்தபடி தமிழர்கள் 4500 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பில் பயன்பாட்டை அறிந்துள்ளவர்கள். நாட்டின் வளர்ச்சி தமிழ்நாடு முக்கிய பங்காற்றுகின்றன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும். தமிழ் மொழியை பிற மாநிலங்களுக்கும் பரப்ப வேண்டும். மற்ற மாநிலங்களில் தமிழை 3-வது மொழியாக சேர்ப்பதற்கு முயற்சி செய்வேன். இதனால் நாடு முழுவதும் தமிழை பரப்ப வேண்டும். பிற மாநில பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும். பட்டம் பெற்றுள்ள மாணவ-மாணவிகள் தங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்லாமல் நாட்டுக்கும் சேவையாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory