» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் பெண் யானை உயிரிழப்பு? வனத்துறை விசாரணை!

சனி 14, மே 2022 12:34:26 PM (IST)



பேச்சிபாறை வனப்பகுதியில் காயம் ஏற்பட்டு பெண் யாணை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, மயிலாறு, குற்றியார் மோதிரமலை உள்ளிட்ட பகுதிகள் வனத்துறை மற்றும் அரசு ரப்பர் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் யானைகள் அதிகம் உள்ளன. மோதிரமலை பகுதியில் பழங்குடி மக்கள் வசிக்கும் இடம் அருகே உள்ள தோட்டத்தில் 55 வயதான பெண் யானை ஒன்று நடக்கமுடியாமல் நின்றுள்ளது. சுமார் 2 மணி நேரம் நகராமல் அதே இடத்தில் நின்ற யானை கீழே விழுந்தது உடனே அந்த பகுதி மலைவாழ் மக்கள் இலை, தென்னை ஒலை ஆகிய உணவு தானியங்களை யானைக்கு கொடுத்தனர். 

அதை சாப்பிட்டு சிறிது நேரம் அப்படியே படுத்த யானை சிறிது நேரத்தில் உயிரிழந்தது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் களியல் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையை பரிசோதித்தனர். அப்போது யானையின் இடது காலில் பலமான காயம் ஏற்பட்டு உடைந்த நிலையில் காணப்பட்டது. பின்னர் மருத்துவ குழுவினர் யானையின் உடலை மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

யானை கீழே விழுந்து கால் உடைந்ததா அல்லது யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்ததா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மருத்துவ குழுவினர் யானையை பிரேத பரிசோதனை செய்து வனத்துறையிடம் ஒப்படைப்பார்கள் அவர்கள் அதை பெற்று வனப்பகுதியில் அடக்கம் செய்கிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory