» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ராஜபக்சே சகோதரர்களுக்கு இந்தியாவின் எந்த மூலையிலும் அடைக்கலம் அளிக்கக் கூடாது: சீமான்
வியாழன் 12, மே 2022 12:07:53 PM (IST)
ராஜபக்சே சகோதரர்களுக்கு இந்தியாவின் எந்த மூலையிலும் அரசியல் அடைக்கலம் அளிக்க முன்வரக்கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சிங்கள இனவாதமும், பௌத்த மதவாதமும் இணைந்து தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை உரிமைகளை மறுத்து, அதன் விடுதலையைத் தகர்த்து, அதற்காகப் போராடிய மக்களை இனப்படுகொலை செய்து அழித்தொழித்தது. மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல் மத, இன வெறியை மக்களுக்கு ஊட்டி, தமிழர்கள் மீதான வன்மத்தை வளர்த்து, அதன் மூலம் மாறி மாறி அரசாண்ட சிங்கள கொடுங்கோன்மை ஆட்சியாளர்களே இன்று இலங்கையில் நடக்கும் அத்தனை துயரங்களுக்கும் மூல காரணம். அதற்குத் துணைபோன அப்பாவி சிங்கள மக்கள் ஐம்பதாண்டுகளாகத் தமிழ் மக்கள் அனுபவித்த கொடுமைகளை, பொருளாதார நெருக்கடிகளை இன்றைக்கு அனுபவித்து வருகின்றனர்.
ஒரு நாட்டில் உண்ண உணவும், குடிக்க நல்ல நீரும் கிடைக்காத போது அங்குப் புரட்சி ஏற்படுவதை ஒருபோதும் தடுக்க முடியாது என்பதற்கு நிகழ்காலச் சாட்சியாக இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் அமைந்துள்ளன. இன்று இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலை நாளை இந்தியாவிற்கும் ஏற்படலாம். எனவே இனியேனும் இந்திய பெருநாட்டை ஆளும் மோடி அரசாங்கம் மதத்தின் மூலம் மக்களைத் தூண்டி பிரித்தாளும் சூழ்ச்சியையும், தேசிய இனங்களின் உரிமைகளைப் பறித்து அவர்களின் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவற்றைச் சிதைத்து இந்தியாவை ஒற்றையாட்சியின் கீழ் கொண்டுவரும் கொடுங்கோன்மையை இனியாவது கைவிட வேண்டும்.
இல்லையென்றால் ஒற்றையாட்சியை நடைமுறைப்படுத்திய இலங்கையில் ஏற்பட்ட மக்கள் புரட்சி நாளை இந்தியாவிலும் ஏற்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை இந்திய ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
மேலும், தற்போது சொந்த நாட்டு மக்களாலேயே விரட்டப்படும் நிலைக்கு ஆளாகியுள்ள ராஜபக்சே சகோதரர்கள் இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி வரப்போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இரண்டு லட்சம் தமிழர்களைத் துள்ள துடிக்கப் படுகொலை செய்த அக்கொடுங்கோலர்களுக்கு மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு எக்காரணம் கொண்டும் இந்தியாவின் எந்த மூலையிலும் அரசியல் அடைக்கலம் அளிக்க முன்வரக்கூடாது. அதுமட்டுமின்றி இந்தியாவின் மூலம் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லவும் அனுமதிக்கக் கூடாது எனவும் மத்திய அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன், என்று அவர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
ANBU அவர்களேமே 13, 2022 - 09:58:27 AM | Posted IP 162.1*****
ஆமாம் வெறும் வாய் மட்டும் தான், உண்மையை தான் சொல்லுவார், திராவிட திருடர்களுக்கு வயிறு எரிய தான் செய்யும். மத்திய அரசுக்கு என்ன தெரியும்? இலங்கையர்க்கு கடன் அளித்தால் நமக்கு திருப்பி கிடைக்காது, இலங்கையில் நடக்கும் குடும்ப ஆட்சியால் ஒரு நன்மையும் இருக்காது.
ANBUமே 12, 2022 - 04:44:06 PM | Posted IP 162.1*****
வெறும் வாயை மெல்லுபவனுக்கு அவல் கிடைத்த மாதிரி ஆமைக்கு இலங்கையை பற்றி பேச வாய்ப்பு கிடைத்தது (ஒன்றுமே தெரியாவிட்டாலும் கையை ஆட்டி காமெடிய பண்ணுவார்).
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் தொடரும் சூறைக்காற்று: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
சனி 2, ஜூலை 2022 5:38:04 PM (IST)

நீட் எதிர்ப்பு பேச்சால் மாணவர்களை திசை திருப்ப கூடாது: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!
சனி 2, ஜூலை 2022 5:01:17 PM (IST)

நெல்லையில் வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
சனி 2, ஜூலை 2022 4:36:20 PM (IST)

வீண் விமர்சனங்களுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிப்பதில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சனி 2, ஜூலை 2022 4:03:20 PM (IST)

இதுதான் நீங்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றிய இலட்சணமா? சீமான் அடுக்கடுக்கான கேள்விகள்
சனி 2, ஜூலை 2022 3:21:06 PM (IST)

கிராம நிர்வாக அலுவலர்கள் திருமண சான்று வழங்க கூடாது: வருவாய்த் துறை உத்தரவு!
சனி 2, ஜூலை 2022 12:36:41 PM (IST)

tamilanமே 13, 2022 - 06:20:36 PM | Posted IP 162.1*****