» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு

புதன் 11, மே 2022 3:59:28 PM (IST)

தமிழகத்தில் வருகிற 21-ம் தேதி நடைபெற உள்ள  குரூப் 2 போட்டித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  மூலம் அரசு தேர்வு செய்து வருகிறது. திறமையான ஊழியர்களை கண்டறிய பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகின்றனர். 

அரசு பணிகளின் அடிப்படையில் இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 ஆகிய தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான குரூப் 2 தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.  இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டு உள்ளது. 

இதில் கூறியிருப்பதாவது,  தமிழகத்தில் வரும் மே 21-ம் தேதி நடைபெற உள்ள குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் டி.என்.பி.எஸ்.சி இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற வலை தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory