» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சுக்கு கரோனா தொற்று : தனிமை படுத்திக் கொண்டார்!

புதன் 11, மே 2022 11:14:48 AM (IST)

உலக பணக்காரர்கள் வரிசையில் ஒருவரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்சுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ இரு ஆண்டுகளைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. உலகம் முழுவதும் கரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 51.83 கோடியாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 47.31 கோடியாகவும் உள்ளது. 

கரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62.79 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில், உலக பணக்காரர்கள் வரிசையில் ஒருவரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்சுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பில்கேட்ஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எனக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. சிறிய அளவிலான அறிகுறிகள் தெரிந்தது. எனவே தொற்றில் இருந்து குணமாகும் வரை என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory