» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இரட்டை கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்ட காவல்துறையினருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

திங்கள் 9, மே 2022 5:23:16 PM (IST)

மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்ட காவல்துறையினருக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.

மயிலாப்பூர் இரட்டை கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-  கடந்த 7-ம் தேதி மயிலாப்பூர் இரட்டைக் கொலை தொடர்பாக புகார் பெறப்பட்டதும் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு, சென்னை காவல்துறையினர் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. 

ஆடிட்டர் ஸ்ரீகாந்த், அவரது மனைவியை கொலை செய்துவிட்டு தப்பிய ஓட்டுனர் கிருஷ்ணா ஆந்திராவில் கைது செய்யப்பட்டார். 6 மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டறிந்து காவல்துறை கைது செய்துள்ளது என கூறினார். மேலும்,  காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டதாக கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். ஆடிட்டர் ஸ்ரீகாந்த், அவரது மனைவி அனுராதா கொலை ஆதாயத்துக்காக நடந்த கொலை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory