» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோடைகாலத்தில் குளிர்பானங்கள், மது, புகை தவிர்க்கவும் : தமிழக அரசு விழிப்புணர்வு

வெள்ளி 6, மே 2022 5:49:45 PM (IST)

கோடைகால வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டிய வழி முறைகளை தொடர்பாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி நிலவும் கோடைகாலத் தாக்கம் மற்றும் வெப்ப அலையிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும், நீர்ச்சத்து இழப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில் அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும். அதோடு மட்டுமின்றி உப்பு சர்க்கரை கரைசல், எலுமிச்சை சாறு ஆகியவைகளும் பருகினால் நீர்ச்சத்து இழப்பு மற்றும் சோர்வினை தவிர்க்கலாம்.

வெயில் தீவிரமாக இருக்கும் நேரங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெளியில் செல்லாமலும், ஏனையோர் வெளியில் செல்லும் பட்சத்தில் கண்டிப்பாக காலணிகள் அணிந்து செல்ல வேண்டும். மேலும் செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல், புகை பிடித்தலையும் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் மத்தியில் இதுகுறித்த விழிப்புணர்வை தென்காசி மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி  வருகிறது.  


மக்கள் கருத்து

தமிழன்மே 7, 2022 - 09:15:04 AM | Posted IP 162.1*****

சாராயம் விக்கிறவங்க விழிப்புணர்வு பண்ணுறாங்களாம் ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory